[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

பெண் குழந்தை பிறந்ததால் கொலை செய்ய முயற்சி: காப்பகத்தில் குழந்தை!

father-and-mother-arrested-for-tried-to-kill-our-child

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தந்தையின் கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண் குழந்தையை தாயிடம் இருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்ட‌ம் குளச்சலில் ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்த ராபின்சன் மனைவி மேரி பியர்லி, பிரசவத்துக்காக குளச்சல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே இ‌ரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3-வதும் பெண் குழந்தையாகப் பிறந்ததில் ராபின்சன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மூன்றாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததால், சிசுவை மருத்துவமனையிலேயே கொல்ல முயன்றதாக ராபின்சன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கொலை முயற்சி குற்றத்தில் இருந்து கணவரை காப்பாற்றுவதிலேயே தாய் கவனம் செலுத்துவதால் பெண் குழந்தையை தாயிடம் இருந்து குழந்தைகள் நல அதிகாரிகள் மீட்டுள்ளனர். சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர் நெல்லையில் உள்ள காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close