[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு: பிரதமர் மோடிக்கு அழைப்பு

cm-palanisamy-invites-to-pm-modi

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் வரும் ஜூலை மாதம் திறக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், ஜெயலலிதா படத்தினை திறந்து வைக்க அழைப்பு விடுத்துள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளவும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னையில் டிசம்பர் 15 முதல் 31 வரை நடைபெறுகிறது. பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த போது இந்தக் கோரிக்கைகளை முன்வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது கடிதம் வாயிலாகவும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். ஜூலை மாதத்தில் பிரதமர் விரும்பும் நாளில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close