[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

நீட் மறுதேர்வில் பாரபட்சம்: பதிலளிக்க சிபிஎஸ்இ-க்கு உத்தரவு

high-court-orders-to-cbse

நீட் தேர்வு முடிவை வெளியிட தடை கோரும் வழக்கில் மே 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கெனவே நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து, ஒரே மாதிரியான மறுதேர்வு நடத்த வேண்டும் என திருச்சியைச் சேர்ந்த மாணவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், நீட் தேர்வில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியில் தேர்வெழுதியவர்களுக்குக் கேள்விகள் ஒரே மாதிரியாகக் கேட்கப்படவில்லை. ஆங்கில வழியில் எழுதப்பட்ட தேர்வில் கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதால் கடினமாக இருந்தன. ஆங்கில வழியில் மாநிலப் பாடத் திட்டத்தைப் படித்த மாணவர்கள் என்ன செய்வார்கள்?

அத்துடன் தமிழகத்தில் ஆங்கில வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. மற்ற மாநிலங்களில் பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் ஆங்கில வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் வங்க மொழியிலும் ஆந்திர மாநிலத்தில் கேள்விகள் ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் கேட்கப்பட்டிருந்தன.

குறிப்பாக நீட் தேர்வில் கேட்கப்பட்டிருந்த 150 கேள்விகளும் பாரபட்சமாக இருந்தன. இதன்மூலம் மாணவர்களின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்வதும் பாரபட்சமாகவே இருக்கும்.

இதனால் இந்தியா முழுக்கவும் ஒரே மாதிரியாக கேள்விகள் அமைக்கப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட வேண்டும். வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவை அறிவிக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இந்த வழக்கு தொடர்பாக மே 24-க்குள் சிபிஎஸ்இ இயக்குநர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close