[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

டிரைவருக்கு அடி, உதை: ஆட்டோவை கடத்திய 2 பெண்கள்

2-teenage-girls-arrested-for-theft-auto

சென்னையில் ஆட்டோ டிரைவரை சரமாரியாக அடித்து, உதைத்து ஆட்டோவை கடத்தி சென்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சேதுலிங்கம். நேற்று முன்தினம் இரவு பவர்ஹவுஸ் அருகே ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு 2 பெண்கள் உள்பட 4 பேர் ஆட்டோவை மறித்து, புழல் காவாங்கரைக்கு செல்ல வேண்டும் என்று கூறினர். அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

புழல் ரெட்டேரி பகுதியில் சென்றபோது அவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஆட்டோவை நிறுத்தச்சொல்லி 4 பேரும் ஆட்டோவில் இருந்து இறங்கினர். திடீரென ஒருவர் டிரைவர் சேதுலிங்கம் கழுத்தில் கத்தியை வைத்து அவரிடமிருந்த 2 ஆயிரம், ஒரு செல்போனை பறித்தார். பின்னர், அவரை சரமாரியாக அடித்து போட்டுவிட்டு 4 பேரும் ஆட்டோவை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் ஆட்டொ டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் மீஞ்சூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஆட்டோவை கடத்தி சென்ற 2 பெண்களை சுற்றிவளைத்து பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், திருவொற்றியூர் விம்கோநகர், ராமநாதபுரம் 4 ஆவது தெருவை சேர்ந்த சுபா(20) மீஞ்சூர் அத்திப்பேடு எம்ஜிஆர் நகரை சேர்ந்த சுகந்தி(22) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 2 பேரையும் புழல் போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட இரு பெண்களிடமும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close