[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

இரட்டை இலை விவகாரம்: தினகரன் குரல் மாதிரிகள் ஆய்வு

admk-logo-issue-ttv-dhinakaran-voice-testing

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக கைதான டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரா இடையிலான தொலைபேசி உரையாடலை ஆய்வு செய்ய டெல்லி காவல்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக சிறையில் இருக்கும் டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரா ஆகிய இருவரின் குரல் மாதிரிகளை சேகரிக்க அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு செய்யப்பட்டுள்ளது. இருவரையும், தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில், டெல்லி காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதற்கு பதில் அளிக்கும்படி குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் வரும் 15ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார். சுகேஷ் சந்திராவை நாளை வரையும், டி.டி.வி.தினகரனை வரும் 15ஆம் தேதி வரையும் ஏற்கனவே சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தைப் பெறத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close