[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

மருத்துவ மேற்படிப்பு இடஒதுக்கீடு விவகாரம்... மற்றொரு அமர்வுக்குச் செல்கிறது

reservation-in-medical-higher-studies-case-chennai-high-court-judgement

மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவரும் முரண்பட்ட தீர்ப்பை வழங்கினர். இதனைத் தொடர்ந்து வழக்கை தலைமை நீதிபதி விசாரிக்க அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படியே தமிழக அரசு நடக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதால் மருத்தவ மேற்படிப்பில் தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று விடும் எனக் கூறி பயிற்சி மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிராமங்களில் பணியாற்ற அரசு மருத்துவர்கள் முன்வராத நிலை ஏற்படும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கூறியும் போராட்டத்தில் ஈடுபடுவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் இருவரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர். நீதிபதி சசிதரன் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று தீர்ப்பளித்தார். ஆனால் நீதிபதி சுப்பிரமணியம் ‘’இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படியே இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகள் நடைமுறையில் இருப்பதாலேயே தமிழக அரசு இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

நீதிபதிகள் இருவருக்கிடையில் கருத்து மாறுபாடு ஏற்பட்டதால், வழக்கை தலைமை நீதிபதி விசாரிக்க அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close