[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

ஒரு மாதம் சுற்றுப்பயணம்: ஓபிஎஸ் ரெடி

ops-plans-to-go-on-state-wide-tour

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் ஒரு மாதகாலம் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்த அதிமுக அணிகள் தற்போது பேச்சுவார்த்தை மூலம் இணையுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கிடையே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மே 5ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர் தொண்டர்களை சந்திக்க உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் ஓ.பி.எஸ். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுமக்களை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் சுற்றுப்பயணம் 5ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் நீடிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ்-இன் சுற்றுப்பயணம் அரசியல் வரலாற்றில் புதிய பல திருப்பங்களை ஏற்படுத்தும் என தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close