[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

யார் அந்த அதிகாரி? திருமாவளவன் கேள்வி

thirumavalavan-interview

டிடிவி.தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்றால், அதனைப் பெறத் தயாராக இருந்த அதிகாரி யார் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வினவியுள்ளார்.

அரியலூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ‘டிடிவி.தினகரன் பெயர் எப்ஐஆரில் இல்லை, ஆனாலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறர்கள். தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றார் என்பது குற்றச்சாட்டு. அதனை வாங்கத் தயாராக இருந்த தேர்தல் ஆணைய அதிகாரி யார்? தினகரன் தவறு செய்தால் அது தமிழகத்துடன் போய்விடும். தேர்தல் ஆணைய அதிகாரி தவறு செய்தால் அது நாட்டுக்கே பெரும் தீங்கு. லஞ்சம் பெற தயாராக இருந்த அதிகாரி யார் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். தினகரனை நியாயப்படுத்த கேள்வி எழுப்பவில்லை’ என அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close