[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

டிடிவி.தினகரன் கைதுக்கு பாஜக காரணமல்ல: தமிழிசை

tamilisai-on-ttv-arrest

டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்ட பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இல்லை என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தினகரன் கைது செய்யப்பட்டதன் பின்னணியில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதனை அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்துள்ளார். ‘ஆதாரங்களின் அடிப்படையிலேயே தினகரன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்து டிடிவி.தினகரன் தமிழகத்தை அவமானப்படுத்தியிருக்கிறார். சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது. தினகரன் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பாஜக இல்லை. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Related Tags : Tamilisai ttv arrestbjp tamilisai ttv arrest
Advertisement:
Advertisement:
[X] Close