திமுக உள்ளிட்ட கட்சிகள் வரும் 25ம் தேதி அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு குறித்து நேற்று நடைபெற்ற விளக்கக் கூட்டம், தமிழக அரசியல் களத்தில் மாற்றங்களுக்கு வித்திட்டிருப்பதாகத் தெரிகிறது.
தமிழக விவசாயிகளின் நலனுக்காகவே வரும் 25ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு எந்த அரசியல் நோக்கமும் அற்றது என்பதே திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. ஆனால் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள் இந்த கூட்டம் விவசாய நலன்களுக்காக மட்டுமே நடைபெறும் கூட்டம் அல்ல என பேசினர். கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்ததுடன், அந்தக் கட்சிக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம் என பேசினர். இந்த கூட்டம் கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். இது தமிழக அரசியலில் புதிய கூட்டணிக்காக அச்சாரம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி
ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்
இனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு
ஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..!
பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு