[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

டெல்லியில் விவசாயிகளை சந்தித்தார் பழனிசாமி

cm-edappadi-palanisamy-met-farmers-in-delhi

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை சந்தித்தார்.

பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 41வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அரசியல் தலைவர்கள் பலர் சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் முதலமைச்சர் பழனிசாமி அவர்களிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக டெல்லியில் போராடும் விவசாயிகளை அவர் இன்று சந்தித்தார். அப்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் அவருடன் இருந்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி, ‘விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துவருகிறது. முக்கியமான கோரிக்கைகளை அய்யாக்கண்ணு வைத்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும். வங்கிக் கடனை ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன். தேசிய நதிகளை இணைக்க பிரதமரிடம் வலியுறுத்துவேன். விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close