[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறக்கப்படுவதால் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

விவசாயிகள் போராட்டத்தை கைவிட ஸ்டாலின் கோரிக்கை

stalin-requests-farmers-to-withdraw-protests

வரும் 25ம் தேதி திமுக நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி திமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் கலந்துகொள்கின்றன. இந்தப் போராட்டத்துக்கான காரணங்களை மக்களுக்கு விளக்கிடும் வகையில், சென்னையில் இன்று மாலை அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று காலை நடந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், டெல்லியில் தமிழக விவசாயிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு வேலைநிறுத்ததிற்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Stalin farmers protestfarmers protest stalin
Advertisement:
Advertisement:
[X] Close