[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ஒதுக்கியதால் வருத்தமில்லை: டிடிவி.தினகரன்

ttv-dhinakaran-says-he-dont-bother

அதிமுகவில் தன்னை ஒதுக்கியதால் தனக்கு வருத்தமில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியை விட்டு நான் நேற்றே ஒதுங்கி விட்டேன். சரிக்கு சரியாக போட்டியிட்டு கட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை

சிலருக்கு எழுந்துள்ள அச்சத்தால் நான் ஒதுக்கப்பட்டேன். அதிமுகவில் இருந்து ஒதுக்கியதால் நான் வருத்தப்படவில்லை. எந்தக்காரணம் கொண்டும் கட்சி

பிளவுபடக்கூடாது. கட்சியோ ஆட்சியோ பலவீனப்பட நான் காரணமாக இருக்க மாட்டேன். சலசலப்பால் கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தப்பாதிப்பும் வந்துவிடக்கூடாது.

என்பலத்தை காட்ட சண்டை போடவேண்டும் என்ற அவசியம் இல்லை.

அவசரகதியில் அமைச்சர்கள் முடிவை எடுத்துள்ளனர். எனக்காக தேர்தலில் பணியாற்றிய அமைச்சர்களுக்கு நன்றி. என்னை நீக்குவதால் அவர்களுக்கு நன்மை

என்றால் அவர்களுக்கு நன்மை நடக்கட்டும். அமைச்சர்களுக்கு ஏற்பட்ட திடீர் அச்சத்திற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. துணைப்பொதுச்செயலாளர்

பதவியில் இருந்து விலகச் சொன்னால் விலகுவேன். அனைவரும் ஒற்றுமையுடன் கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்த வேண்டும். இரு அணிகளும்

இணைவதால் எனக்கு எந்த வகையிலும் பிரச்னை இல்லை.

திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் என்னிடம் போனில் பேசினர். அமைச்சர்கள் யாருக்கும் பயப்படாமல் ஆட்சியை நடத்த வேண்டும். கட்சி

களங்கப்பட்டு விடக்கூடாது. கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னைகளை கணிக்க நான் குருமூர்த்தி இல்லை. கட்சிப்பொறுப்பை எனக்குக் கொடுத்தது சசிகலாதான். கட்சி

அலுவலகத்தை ஓபிஎஸ் அணியினர் கைப்பற்றப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. நீதிமன்ற விவகாரத்தை முடித்த பின்னர் சசிகலாவைச் சந்திப்பேன் என

கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close