[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்கிறார் எஸ்.ஏ.பாப்டே
  • BREAKING-NEWS இன்று தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர்

டிடிவி தினகரனை ஒதுக்கிவிட்டு ஆட்சி செய்ய முடிவு: ஜெயக்குமார்

minister-jayakumar-interview-after-cm-meets

டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு ஆட்சி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக-வின் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பான பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளிவந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிலும் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசித்தோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுபாட்டில் இருக்கக்கூடாது. ஒரு குடும்பத்திடம் இருந்து கட்சி ஆட்சியை காப்பாற்றுவோம். தினகரனை ஒதுக்கி விட்டு கட்சியும், ஆட்சியும் நடத்தப்பட வேண்டும். கட்சியை வழிநடத்த புதிதாக குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close