[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

ஆ... கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

rainfall-in-some-parts-of-tamilnadu

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் வேளையில் பல்வேறு ‌பகுதிகளில் மழை பெய்தது. கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. ஓசூரில் சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்தது. தேனி மாவட்டம் கம்பத்தில், திடீரென பலத்த காற்றுடன் சுமார் அரை மணி நேரம் மழை ‌பெய்தது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சித்துராஜபுரம், பேராபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒன்றரை மணி நேரம் மழை பெய்தது. இதேபோல், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது. வெப்பத்தினால் தவித்து வந்த மக்கள், இந்த மழையினால் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலும் கன மழை பெய்தது. ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. புதுப்பாளையம். வெண்ணந்துர். ஆண்டகளுர்கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதே போல், வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்ட தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close