[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

கடலூரில் 7 நாட்களில் 3 கொலை

3-killed-in-7-days-in-cuddalore

கடலூர் மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் 3 பேர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் கண்ணுத்தோப்பு கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பாலசுப்பிரமணி என்பவர் கட்டையால் தாக்கியதில் வாசுதேவன் என்பவர் உயிரிழந்தார். தலைமறைவான பாலசுப்பிரமணியை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர் கடந்த ஒருவாரத்தில் கடலூர் மாவட்டத்தில் நடக்கும் 3 ஆவது கொலையாகும் இது.

கடந்த ஞாயிறன்று சிதம்பரம் அருகே ஆழிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற பெண் கொல்லப்பட்டடார். கடந்த 10 ஆம் தேதி பண்ருட்டி அருகே திருவதிகையில் திருமணமான 8 நாட்களில் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை எனக்கூறி அவரது மனைவியே குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்தார். தற்போது முன்விரோதத்தால் வாசுதேவன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Murder cuddalore 7 daysmurder
Advertisement:
Advertisement:
[X] Close