[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

மத்திய பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை: முதலமைச்சர் ஜெயலலிதா

tn-cm-jayalalithaa-criticized-union-budget

மத்திய பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யவில்லை என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் சாலைப் போக்குவரத்துத் துறை தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு கவலை தருவதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இம்முடிவு மாநில அரசுகளின் உரிமையில் தலையிடுவதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு ‌கூடுதல் வரி விதிப்புகள் மூலம் கிடைக்கும் தொகையை மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்வது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், இதை தாம் எதிர்ப்பதாகவும் முதலமைச்சர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் விவசாயத்திற்கும் கிராமப்புற முன்னேற்றத்திற்கும் மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதை வரவேற்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

திட்டம் மற்றும் திட்டமில்லா செலவுகள் என்ற நடைமுறையை கைவிடுவது தொடர்பான தமது யோசனை பட்ஜெட்டில் ஏற்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருவதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close