[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

மதுக்கடைக்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலுக்கட்டாயமாக கைது

tasmac-protester-arrested-in-midnight

திருப்பூரில் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் தடியடி நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்ககோரியும், மதுக்கடையை மூடக்கோரியும் காலவரையற்ற உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுவினரை போலீசார் அதிகாலையில் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

சாமளாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த மதுபானக்கடையை அகற்றக்கோரி நேற்று காலை முதல் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியே வந்த சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய எம்.எல்.ஏ. கனகராஜ், அதிகாரிகள் முறையாக பதிலளிக்கவில்லை எனக்கூறி அங்கிருந்து சென்றார்.

அவர் சென்ற சிறிது நேரத்திலேயே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அங்கிருந்த பெண்களை சரமாரியாக தாக்கி கலைந்து போகச் சொன்னார். கலைந்து போகாத நிலையில் மற்ற காவல்துறையினரும் பொதுமக்களை சரமாரியாக தாக்கினர். இதில் சிவகணேஷ் என்பவரது மண்டை உடைந்து ரத்தத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனையடுத்து, காவல்துறை அடக்குமுறையைக் கண்டித்தும், சாமளாபுரம் மதுக்கடையை அகற்ற கோரியும் அப்பகுதியினர் காலவரையற்ற போராட்டத்தினை தொடக்கினர். நள்ளிரவு கடந்தும் போராட்டம் நீடித்த நிலையில் அதிகாலை 3.30 மணி அளவில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் போராட்டக்குழுவினர் 27 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close