[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

சிபிஐ விசாரிக்க வேண்டும் : மு.க ஸ்டாலின்

cbi-probe-must-be-set-to-investigate-list

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பட்டியலிலுள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ‌மு.க.ஸ்டாலின், இந்த நடவடிக்கை, நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள தற்காலிக முயற்சி என குறிப்பிட்டுள்ளார். இடைத்தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அறிவியல் ரீதியான நடைமுறைகளை கடைபிடித்து எல்லை கடந்த அதிகார துஷ்பிரயோகத்தை செய்வதுதான் அதிமுகவின் தேர்தல் பணி என ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முறைகேடுகளை தடுக்க அரசியல் கட்சித் தலைமை முன்வரவேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியிருப்பதை வரவேற்பதாகவும் ஆனால் அதிமுகவின் இரு அணிகளும் ஜனநாயகப்படி செயல்படுவதில்லை என்பதை தேர்தல் ஆணையம் மனதில்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பினாமி ஆட்சி தொடரும்வரை, நியாயமான தேர்தல் நடத்தும் சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். நேர்மையான முறையில் தேர்தல் நடக்க வேண்டுமென்றால், முறைகேடுகளுக்கும் தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய‌ சூழ்நிலைக்கும் காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க‌வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பட்டியலில் உள்ள அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள மு.க.ஸ்டாலின், இனி எந்த காலத்திலும் தேர்தலில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தேவை என‌றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Rknagar list stalin palanisamyrknagar stalin
Advertisement:
Advertisement:
[X] Close