[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஜெர்மனி பெண் பலாத்காரம்: ஒருவரிடம் போலீஸ் விசாரணை

german-woman-raped-in-chennai-police-enquiry

மாமல்லபுரத்தில் ஜெர்மனி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெர்மனைச் சேர்ந்த 15 பேர் சனிக்கிழமை மாமல்லபுரம் வந்தனர். அங்குள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். அந்தச் சுற்றுலா பயணிகளில் ஒருவரான இளம் பெண், நேற்று காலை பீச்சில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர், கத்தியை காட்டி மிரட்டி, அவரை அருகில் உள்ள சவுக்குத் தோப்புக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் மாமல்லபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.

குற்றவாளிகளை பிடிக்க அமைக்கப்பட்ட 4 தனிப்படை காவல்துறையினர், மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடும் நபர்களை புகைப்படம் எடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காண்பித்தும் அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சென்னையிலுள்ள ஜெர்மனி துணைத் தூதரகத்திலும் அந்தப் பெண் புகார் அளித்திருக்கிறார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close