[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

கேஸை முடித்து வையுங்க...இல்லை ஜெயிலுக்கு அனுப்புங்க... கோர்ட்டில் கொந்தளித்த வைகோ!

vaiko-angry-speech-in-court

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன்மீதான தேசதுரோக வழக்கை விரைவாக முடிக்க வேண்டும்; இல்லையெனில் தம்மை சிறையிலடைக்க வேண்டும் என கொந்தளித்ததால் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வைகோவை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோவின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று திடீரென ஆஜரான வைகோ ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தம் மீது நிலுவையில் உள்ள தேச துரோக வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அத்துடன் வழக்கை விரைந்து முடிக்காவிட்டால் தம்மை சிறைக்கே அனுப்பிவிடுமாறும் வைகோ கேட்டுக் கொண்டார்.

எழும்பூர் நீதிமன்றத்தை வைகோவின் இந்த கோரிக்கை அதிர வைத்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத், வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் வைகோ தமது சொந்த ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார். ஆனால் வைகோ ஜாமீனில் செல்ல மறுத்துவிட்டார். இதையடுத்து வைகோவை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையிலடைத்துள்ளனர். தமிழகமே ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலை பெரும் எதிபார்ப்புடன் பார்த்து கொண்டிருக்க வைகோவின் இந்த திடீர் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close