[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

வாக்களிக்க ஆதாரையும் பயன்படுத்தலாம்: தேர்தல் ஆணையம்

rk-nagar-polls-elector-s-card-not-mandatory

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள் அதற்கு மாற்றாக ஆதார் உள்ளிட்ட புகைப்படத்துடன் கூடிய 12 அடையாள அட்டைகளில் ஒன்றைக் காண்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்கு பதிலாக கடவுச்சீட்டு, ஒட்டுநர் உரிமத்தைக் காண்பிக்கலாம். மத்திய மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டையை வாக்குச்சாவடிக்கு எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய வங்கி மற்றும் அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் அல்லது பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டையைக் காட்டலாம்.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு காண்பிக்கலாம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை அல்லது தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்ட் ஏற்றுக்கொள்ளப்படும். புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்பட சீட்டு அல்லது நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டையைக் காண்பிக்கலாம். ஆதார் அடையாள அட்டையும் , வாக்களிப்பதற்கான மாற்று அடையாள ஆவணங்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close