[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஜெயலலிதாவை எதிர்த்தது திமுக; துரோகம் செய்தவர் தினகரன்: ஸ்டாலின்

stalin-accuses-ttv-dhinakaran

ஜெயலலிதாவை திமுக எதிர்த்ததே தவிர துரோகம் செய்யவில்லை; துரோகம் செய்தது தினகரன்தான் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றியமைக்கும் என்று பேசினார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஓ.பன்னீர்செல்வத்துக்கு வராத ஞானம், பதவிக்காக வந்ததா என்று கேள்வி எழுப்பிய அவர், பணமோசடியில் ஈடுபட்டதற்காக ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டவர் ஓபிஎஸ் என்றும் கூறினார். சசிகலா குறித்த 90 சதவீத உண்மைகளை ஓபிஎஸ் வெளியிடாததன் காரணம் என்ன என்று வினவிய ஸ்டாலின், ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசியாக ஓபிஎஸ் இருந்தால் உண்மைகளை வெளியிட வேண்டும் என்றும் கூறினார். ஜெயலலிதாவின் மரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராத நிலையிலேயே அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்ததன் பின்னணி என்ன என்றும் ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். ஜெயலலிதா மறைந்த சமயத்தில் பதவியின் மீதே ஓபிஎஸ் குறியாக இருந்ததாகவும் ஸ்டாலின் பேசினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழக வரலாற்றையே மாற்றியமைக்கும் என்றும் ஸ்டாலின் கூறினார். ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டவர் ஓபிஎஸ் என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், தமிழகம் கடுமையான நிதிப்பற்றாக்குறையில் தவிக்க முன்னாள் நிதியமைச்சரான ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close