[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

செருப்பு வீசியவர் ஆர்.கே.நகரில் வேட்பு மனு தாக்கல்

soloman-nominate-in-rknagar-byepoll

சேலத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசியவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

சேலத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற மாணவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு பயின்று வந்தார். அவர் கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலுக்கு அஞசலி செலுத்த வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண் மீது சந்தோஷ் என்பவர் செருப்பை வீசியேறிந்தார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்தபடியே சாலமன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்திய மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளராக உள்ள அவர் அந்த அமைப்பின் சார்பில் போட்டியிடுகிறார். சாலமன் சிறையில் இருப்பதால் அவரது சகோதரர் சந்தோஷ் சிறையில் இருக்கும் அவரிடம் கையெழுத்து பெற்று தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close