[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா பேச்சுவார்த்தை: புதிய தலைமுறைக்கு இல.கணேசன் பிரத்யேக பேட்டி

ila-ganesan-says-bjp-is-talking-with-admk-for-election-alliance

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா பேச்சுவார்த்தை நடத்‌தி வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்த பாரதிய ஜனதா தமிழக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் இரு தினங்களில் சென்னை வரவுள்ளதாகவும் இ‌ல கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி இல.கணேசனுடன் புதிய தலைமுறை செய்தியாளர் மணிகண்டன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் எழுப்பி கேள்வியும், இல,கணேசன் அளித்த பதிலும் விவரம் வருமாறு?

கேள்வி: எந்தெந்த கட்சியும் அவர்(ஜவடேகர்) கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்?

பதில்: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சில கட்சிகளோடும் நாங்கள் பேசுவோம். எந்த கட்சியுடன் பேசக்கூடாது என்ற வரைமுறையை நாங்கள் வைத்துக்கொள்ளவில்லை.

எங்கள் கதவுகள் எந்தக்கட்சிக்கும் மூடப்படவில்லை. ஆனால் எந்தக்கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என சிந்தித்துமேயானால், இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மக்கள் நலக்கூட்டணி, மற்றொன்று திமுக காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியோடு பேசுவதற்கு வாய்ப்பே இல்லை. அதற்கான சிந்தனையும் இல்லை. ஏனையக் கட்சிகள் எல்லாவற்றோடும் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

கேள்வி: தேமுதிகவுடன் கூட்டணியில் ஏதோவது நிபந்தனை விதித்துள்ளார்களா? அதற்கு பாஜக தரப்பில் என்ன மாதிரியான பதில்கள் உள்ளது?

பதில்: ஒரு பேச்சுவார்த்தையில் கூட்டணிக்காக என்னென்ன வேண்டும் என்ற தகவல் வரும். அதனை நீங்கள் நிபந்தனை என்ற வார்த்தையில் சொல்வது பொறுத்தமற்றது. எல்லாத் தேர்தலிலுமே,எல்லாக்கட்சிகளுமே பேசக்கூடிய வழக்கமான விஷயம் தான். அதனால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். அல்லது சரிபாதி ஏற்றுக்கொள்ளலாம். இது ஒன்று புதியதாக இல்லை.பேசுகிறார்கள். என்னென்னவெல்லாம் பேசினார்கள் என்பதை பற்றி கூறினால் கூட்டணி அமையாமல் போய்விடும்.

கேள்வி : தேமுதிக-பாஜக கூட்டணிக்கு சாதகம் இருக்கிறதா?

பதில்: நாங்கள் முதன்முறையாக சந்தித்தோம். தாக்கரீதியான சமிக்ஞை வராமல் போனால் நாங்கள் மீண்டும் மீண்டும் சந்திப்போமா. சமிஞை வரும் காரணத்தாலேயே எங்கள் கட்சி தலைவர்கள் மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு உள்ளிட்டோர் மட்டுமே சந்தித்து வந்த பொழுது, அதன் பிறகு எங்களுடைய பொதுச்செயலாளர் சந்திக்கிறார் என்றால், அங்கிருந்து ஏதோ ஆக்கப்பூர்வமான சமிக்ஞை வந்திருப்பதாகத்தானே என்று பொருள்.

கேள்வி: மற்ற கூட்டணி கட்சி தலைவர்ளுடான சந்திப்பை (உதாரணமாக பாமக , ஐஜேகே ஏசிஎஸ் )எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: எதுவாக இருந்தாலும் இரண்டு மூன்று நாட்களில் பிரகாஷ் ஜவடேகர் வந்த பிறகு தெளிவாகிவிடும். எங்கள் கருத்தை சொல்லியிருக்கிறோம். தேசிய தலைமை இப்போது பொறுப்பெடுத்துள்ளது. அவர்கள் தீவிரமாக செயல்படுகிறார்கள். வெகுவிரைவில் அறிவித்துவிடுகிறார்கள்.

கேள்வி: செய்தியாளர் சந்திப்பில் பேசியது மாதிரி, திமுக காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி தவிர்த்து மற்றக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்தை தொடங்கியுள்ளது என்று கூறுகிறீர்கள். அதிமுகவுடன் பேச்சுவார்த்தை எப்படி இருக்கிறது?

பதில்; இருக்கலாம். நான் மறுப்பதற்கில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close