[X] Close
JUST IN
தமிழ்நாடு 16 Mar, 2017 11:19 AM

தமிழகத்திற்கு கடன் எவ்வளவு? பட்ஜெட்டில் தகவல்

தமிழகத்துக்கு 3,14,366 கோடி ரூபாய் கடன் உள்ளது என பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அவரது உரையில் தமிழகத்தில் மொத்தம் 3,14,366 கோடி ரூபாய் கடன் உள்ளது என்று அதில் கூறினார். மேலும் அதில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:

ரூ.7000 கோடிக்கு பயிர் கடன் வழங்க நடவடிக்கை.

2017-18 ஆம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை ரூ. 41,977 கோடி.

பால் வளத்துறைக்கு ரூ.130 கோடி, மீன் வளத்துறைக்கு ரூ.768 கோடி.

தமிழக பொருளாதார வளர்ச்சி 6.5% இல் இருந்து 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி

Advertisement:
Advertisement:
[X] Close