JUST IN
 • BREAKING-NEWS போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
 • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
 • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
 • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
 • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
 • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
 • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
 • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
 • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
 • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
 • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
தமிழ்நாடு 15 Mar, 2017 10:08 PM

நீட் தேர்வினை தமிழகம் மட்டும் எதிர்ப்பது ஏன்?: நீதிபதி கேள்வி

Cinque Terre

நீட் தேர்வு தொடர்பான வழக்கில், தமிழக அரசு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த திவ்யாஷரோன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. சுயநிதி கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இருந்து, விதிமுறைகளின்படி அரசு கல்லூரிகளுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் ஒதுக்கப்படுகிறதாக என அவர் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வினை நாட்டின் பிற மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும்போது தமிழகம் மட்டும் எதிர்ப்பது ஏன் என கேள்வி எழுப்பிய நிதிபதி, நீட் தேர்வை எதிர்கொள்ள தகுதியான கல்வியை மாணவர்களுக்கு வழங்கவில்லை என அரசு ஒப்புக் கொள்கிறதா என வினவினார்.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் பெயரைப் பயன்படுத்தி மருத்துவக் கல்வி நிறுவனங்கள் வணிகம் செய்வதாக தெரிவித்த நீதிபதி கிருபாகரன், சுயநிதி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பிற்காக வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பின‌ர். அப்போது ஆஜரான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கங்கள் தரப்பு வழக்கறிஞர்‌கள், நீதிபதி ராமானுஜம் குழு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிப்பதாக விளக்கமளித்தனர். இருதரப்பு வ‌தங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கு தொடர்பாக தமிழக அரசு, சுயநிதி மருத்துவக்கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads