[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

குறைபாடு மனதுக்கு அல்ல... கண்களே இல்லாமல் கல்விப்பணியில் சாதனை படைத்த பெண்..!

physically-challenged-women-achieved-her-education

பெண்கள் நாட்டின் கண்கள் என்பார்கள். ஆனால் கண்களே இல்லாமல் கல்விப்பணியில் சாதித்து கொண்டிருக்கிறார் ஒரு பெண்மணி. அவரின் சாதனை பயணம் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஒரு வயதில் பார்வையை இழந்தவர் சுகுணா.‌ படிப்பின் மீ‌தான தீராத ஆர்வம் இருந்தாலும், வறுமையின் காரணமாக இவரது கனவுகள் பள்ளிப்படிப்போடு நின்றுவிட்டன. ஆனாலும் அவரின் கல்வித் தாகம் தணியவில்லை. திருமணத்திற்கு பிறகு கணவரின் உதவியோடு படிக்க ஆரம்பித்து எம்.ஏ, பி.எட் முடித்துள்ள சுகுணா‌, தனது குறையையே‌ பலமாக எண்ணுகிறார்.

படித்து முடித்து இரயிலில் உணவு பொருட்கள் விற்று வந்த சுகுணா தன் விடாமுயற்சி காரணமாக இப்போது ஆசிரியராக பணியாற்றி வருகிறார். செங்கல்பட்டில் இருக்கும் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்துவரும் சுகுணா, ஒருபுறம் குடும்ப தலைவி மறுபுறம் ஆசிரியை என பன்முகத்தன்மையோடு இயங்கிவருகிறார். குறைபாடு என்பது உடலுக்கு மட்டும்தான் மனதுக்கு அல்ல என்பதை உணர்த்தும் சுகுணா மாணவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் ஆசிரியர் தான் என்கிறார்கள் சக ஆசிரியர்கள்.

உடல்வலிமையை விட மனவலிமையே சிறந்தது என்பதை தனது வெற்றிப் பயணத்தின் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் சுகுணா. இவரின் அயராத முயற்சிகள் இத்துடன் முடிந்துவி‌டவில்லை. அடுத்ததாக தமிழில் பிஎச்டி முடிக்கும்‌ இலட்சியத்துடன் உழைத்துக்கொண்டிருக்கிறார். சுகுணாவின் சாதனை பயணம் அனைவரையும் வியக்க வைக்கத் தான் செய்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close