[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

அதிவேகமாக பைக்கில் வந்ததால் தூக்கி வீசப்பட்ட இளைஞர்... (வீடியோ)

bike-accident-in-thanjavur

தஞ்சாவூரில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் சாலை தடுப்பில் மோதி உயிரிழந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தஞ்சாவூர் பெரிய கோவில் மேம்பாலம் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி சாலை‌‌யில்‌‌‌, கார் ஒன்றினை முந்திச் செல்வதற்காக அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்‌, சாலை தடுப்புச் சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த அடிப்பட்ட நிலையில் மயங்கி கிடந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், இளைஞர் உயிரிழந்துவிட்டார். ஹெல்மெட் அணியாததும், பைக்கில் அதிவேகமாக வந்ததுமே இளைஞர் உயிரி‌‌ழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. தஞ்சை தெற்கு காவல்துறை நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் பள்ளி அக்ரஹார தெருவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் பிரவீன் குமார் என்பது தெரியவந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close