பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வரவுள்ளதால் அங்கு 5ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இதற்காக மாலை 5.20 மணிக்கு கோவை வரும் பிரதமர் இரவு 9 மணிக்கு டெல்லி திரும்பவுள்ளார். மேலும், இந்த விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தராராஜே சிந்தியா என முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். அதனால், ஈஷா யோகா மையம் அமைந்துள்ள பகுதிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு படை ஐ.ஜி.பியூஸ் பாண்டே தலைமையிலான 60 வீரர்களும் கோவை வந்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!
9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..!
தெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி ?
தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை