[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

நம்பிக்கை வாக்கெடுப்பு: ஸ்டாலின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

stalin-case-adjournment

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய திமுக தரப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமைப் பொறுப்பு வகிக்கும் நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் மற்றும் ஆர். மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிமுக சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக திமுக தரப்பில் கூறிய குற்றச்சாட்டிற்கு, யார் அடைத்து வைத்தனர்? அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திமுக தரப்பு மூத்த வழ‌க்கறிஞர் சண்முக சுந்தரம், 5-ஆவதாக எங்கள் மனுவில் இடம்பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏக்களை விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைத்திருந்ததாகவும், அவரின் கட்டாயத்தின் பேரின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததாகவும் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தை எதற்காக எதிர்மனுதாரராக சேர்த்துள்ளீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இருந்ததாகவும், மேலும் அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு அவரும் காரணம் என ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேரவை நிகழ்வுகள் தொடர்பாக என்னென்ன வீடியோ ஆதாரங்கள் உள்ளதோ அவற்றை சமர்பிக்குமாறு ஸ்டாலின் தரப்பிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதற்கிடையே, இதே காரணத்துக்காக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close