[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?

ec-to-tell-local-body-election-date-to-madras-hc

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நூட் ராமமோகன் ராவ் மற்றும் எஸ்.எம். சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமார், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலாக தாக்கல் செய்ய முயன்றார். மே 15 ஆம் தேதிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு 4 மாதங்கள் ஆகியும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை‌ என நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர், மே 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலுக்கு உத்தேச தேதி தேவையில்லை, நிர்ணயிக்கப்பட்ட தெளிவான தேதி தேவை எனவும் உத்தரவிட்டனர். இதனிடையே, திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட மனுதாரரும் முயல்கிறாரா என அதிருப்தியை தெரிவித்து இறுதி தீர்ப்பை நீதிபதிகள் இன்று அறிவிப்பதாக ஒத்தி வைத்தனர். ‌

இதனால், உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவறினால், இடைக்கால உத்தரவாக தேர்தல் தேதியை நீதிமன்றமே வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close