JUST IN
  • BREAKING-NEWS வழக்குகளில் இருந்து தப்பிக்கவே பாஜகவுக்கு அதிமுக ஆதரவு: ஸ்டாலின்
  • BREAKING-NEWS எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேர் கைது
  • BREAKING-NEWS பாஜகவிடம் இருந்து அழைப்பு வந்ததால் டெல்லி பயணம்: ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவராக மீராகுமார் வெற்றி பெற வாழ்த்துக்கள்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்-க்கு ஆதரவு தெரிவிக்க டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்
  • BREAKING-NEWS எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாருக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு மத்திய அமைச்சரவை நன்றி
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வருவது குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த வேட்பாளர் மீராகுமார்: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு
  • BREAKING-NEWS சபாநாயகர் தலைமையில் அவை உரிமைக்குழு கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கடன்களை தள்ளுபடி செய்வது என்பது நிரந்தர தீர்வாகாது: வெங்கய்ய நாயுடு
தமிழ்நாடு 18 Feb, 2017 03:45 PM

ஆளுநர் மாளிகை முன் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

Cinque Terre

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பாக திமுக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடரில் ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையில் இருந்து திமுகவினர் குண்டுக்கட்டாக தூக்கி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வென்றது.

இந்தநிலையில், ஸ்டாலின் மீதான தாக்குதல் தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளிக்க திமுக எம்எல்ஏக்கள் ராஜ் பவன் சென்றனர். ஆளுநரிடம் புகார் அளிக்கச் சென்ற திமுக எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகை முன்பாக திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது காவலர்களை ஏவி காட்டுமிராண்டித்தனமாக சபாநாயகர் நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டினார். அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பினர்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads