[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சரத்குமார் ஆதரவு

sarath-kumar-supports-tn-cm-o-pannerselvam

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. முன்னாள் எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இவர் தவிர, முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பிரசாத் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். மேலும் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பாபு முருகவேலும் முதலமைச்சருக்கு ஆதரவு அளித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close