[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ஆர்ப்பரித்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு..!

alanganallur-jallikattu-finished-successfully

பல போராட்டத்துக்கு பின்னர் இன்று காலை தொடங்கிய உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது வெற்றிகரமாக முடிவுற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு பல தடைகளை தாண்டி வாடிவாசலில் ஜல்லிக்கட்டு காளைகள் இன்று காலை 8 மணிக்கு சீறிப்பாய்ந்தன. ஜல்லிக்கட்டை ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்க 1,650 காளையர்கள் பதிவு செய்திருந்தனர். 950 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் 1050 காளையர்களும் 549 காளைகளும் பங்கேற்க ஜல்லிக்கட்டு ஆரவாரத்துடன் நடந்தது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நடிகர் லாரன்ஸ் மற்றும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். சீறிப் பாய்ந்து ஓடிய காளைகளை மாடுபிடி வீரர்கள் துணிச்சலாக பிடித்து பரிசுகளை அள்ளிச் சென்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆல்டோகார், டிராக்டர், புல்லட், தங்கம் மற்றும் வெள்ளி காசு போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசிக்க பொதுமக்களுக்கு விழா குழுவினர் தனி கேலரி அமைத்து கொடுத்திருந்தனர். அலங்காநல்லூர் முழுவதுமே விழாக்கோலம் போல் காட்சியளித்தது. மாடுபிடி வீரர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் சென்ற மாடுகளின் உரிமையாளருக்கும் பல பரிசுகளை காளைகள் பெற்றுத்தந்தன.

இதையடுத்து, காலை கோலாகலமாக தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணிக்கு நிறைவுற்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close