[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் அச்சம்

stalin-fear-about-desalination-of-sea-water

கடலில் கலந்திருக்கும் எண்ணெய் படலத்தால், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எண்ணூரில் கடலில் படர்ந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை ‌அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணெய் படலத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். கடலில் கலந்திருக்கும் எண்ணெய் படலத்தால் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

கடலில் படிந்துள்ள மாசுகளை அகற்றவும், கப்பல் நிறுவனங்களிடம் இருந்து உரிய இழப்பீட்டை பெறும் வகையில் வழக்கை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர், மத்திய அரசுடன் இணைந்து‌ எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close