[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

மீனவர்களுக்கு இழப்பீடு குறித்து பரிசீலனை - தமிழக அரசு அறிவிப்பு

compensation-for-fisherman

சென்னை எண்ணூர் அருகே 2 கப்பல்கள் மோதிய விபத்தில் எ‌ண்ணெய் கசிவால்‌ பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழ‌ங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை எண்ணூர் அருகே 2 கப்பல்கள் மோதிய விபத்தில், கப்பல் ஒன்றிலிருந்து வெளியேறிய எண்ணெய், திருவான்மியூர் கடற்கரை வரை பரவியிருக்கிறது. இதனால், கடல் நீரில் மாசு அதிகமாகி, ஆக்சிஜன் முற்றாக குறைந்துபோயிருப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கடற்கரையில் சேரும் எண்ணெய் படலம் காரணமாகவும் மீன்கள் மற்றும் ஆமைகள் இறந்து கிடப்பதாலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதையடுத்து எ‌ண்ணெய் கசிவால்‌ பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழ‌ங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close