[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

போராட்டத்தில் மாற்றம் இல்லை மெரினாவில் இளைஞர்கள் அறிவிப்பு

jallikkattu-issue-protesters-continue-in-chennai-merina

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் போராடும் இளைஞர்களுடன் தமிழக அமைச்சர்கள் நள்ளிரவில் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்தாலும், பேச்சுவார்த்தை குழு போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அணி அணியாக திரண்டனர். சமூக வலைதளம் வாயிலாக இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தன்னெழுச்சியாக போராட்டக் களத்திற்கு வந்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆவேச முழக்கங்கள் பகலை தாண்டியும், இரவிலும் தொடர்ந்தது. கொட்டும் பனியிலும் இளைஞர்களின் வீறுமிக்க, உறுதிமிக்க போராட்டம் நீடித்தது. இதன் எதிரொலியாக, நள்ளிரவு ஒரு மணியளவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர், போராட்டம் நடத்தி வருபவர்களில் 10 பேருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக அமைச்சர்கள் அளித்த உறுதிமொழியை ஏற்றுக் கொள்ளும் அதேநேரத்தில், முதலமைச்சர் தரும் அறிக்கையை பொறுத்தே போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து அறிவிக்கப்படும் என, பேச்சுவார்த்தையில் பங்கேற்றோர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.இதையடுத்து மெரினா கடற்கரையில் திரண்டிருந்தவர்களிடம், அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை குறித்து ஒலிப் பெருக்கி மூலம் விளக்கி கூறப்பட்டது. ஆனால், அமைச்சர்கள் அளித்த உறுதிமொழிகள் குறித்த சிலவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விண்ணை முட்டும் அளவுக்கு போராட்டக்காரர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்தது. அப்போது, போராட்டம் அமைதியாக நடந்தால் முழு பாதுகாப்பு அளிப்போம் என்றும், கலைந்து செல்லுமாறும் காவல்துறையினர் தெரிவித்தனர். இருந்தாலும், இளைஞர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி 24 மணி நேத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close