எம்ஜிஆரின் நினைவைப் போற்றுவதுடன், எவ்வித பலனும் எதிர்பாராமல் அவர் மீது உண்மையான அன்பு கொண்டிருப்போருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்க நிலையில் திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் திமுக தலைவர் கருணாநிதியுடன் இணைந்து பயணித்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த போதும் எம்.ஜி.ஆர் -கருணாநிதி இடையே ஆழமான நட்பு தொடர்ந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.கவின் கொள்கைப் பிரச்சார நாடகத்தில் தாம் நடித்த போது, அதற்குத் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கி தன்னை உற்சாகப்படுத்தியவர் எம்ஜிஆர் என்று ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார். மறைந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு பெறும் இந்த நேரத்தில் அவரது நினைவைப் போற்றி, எவ்வித பலனும் எதிர்பாராமலும் அனுபவிக்காமலும் அவர் மீது உண்மையான அன்பு கொண்டிருப்போருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், எம்ஜிஆரின் நினைவைப் போற்றுவதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்