[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்

பொங்கல் விடுமுறை விவகாரம்.... ஊழியர் நலக்குழு‌ அதிகாரிகளே காரணம்..!

pongal-leave-issue

‌பொங்கல் விடுமுறை தினம் பொதுப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ஊழியர்கள் நலக்குழு அதிகாரிகளே இதற்கு காரணம் என ‌மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம் புகார் தெரிவித்துள்ளது.

பொங்கல் திருநாள் விடுமுறையை, கட்டாயப் பொதுவிடுமுறைப் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டதாக வெளியான தகவல், தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பி உள்ளது. ‌இதற்கு அதிமுக, திமுக உட்பட பெரும்பான்மையான கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால், மத்திய அரசு ஊழியர்கள் நலக்குழுவில் உள்ள அதிகாரிகள் எடுத்த தவறான முடிவே இந்தக் குழப்பத்திற்கு காரணம் என, மத்திய அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து புதியதலைமுறைக்கு ‌விளக்கமளித்த‌ துரைப்பாண்டியன்,‌ ‌மொத்தம் 17 அரசு விடுமுறை நாட்களில், 3 நாட்களை மட்டும் அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் நலக்குழு முடிவு செய்யலாம் என தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில், பொங்கல் திருநாள் வேலைநாட்களில் வரும் போது, அந்த நாளை விடுமுறை தினமாக அறிவிக்குமாறு, மத்திய அரசு ஊழியர்கள் நலக்குழு பரிந்துரைத்து வந்திருப்பதாக துரைப்பாண்டியன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் தினம் சனிக்கிழமை வந்ததை அடுத்து, அன்று ஏற்கனவே விடுமுறை நாள் என்பதால், தனியாக அறிவிக்கத் தேவையில்லை என ஊ‌ழிய‌ர்நலக்குழு அதிகாரிகள் முடிவு செய்துவிட்டதாகவும்து ரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதிகாரிக‌ள் ‌கவனக்குறைவுடன் எடுத்த இந்த முடிவு, மத்திய அரசின் சேவைத்துறைகளான அஞ்சல், ரயில்வே மற்றும் பொது மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் விளக்கம் தெரிவித்துள்ளார். அதாவது, மத்திய அரசின் நிர்வாகத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் சனிக்கிழமை‌ விடுமுறை என்பதால் வேலைக்குச் செல்லத் தேவையில்லை என்றும், அஞ்சல‌கம், ரயில்வே போன்ற சேவைத்துறையைச் சேர்ந்தவர்கள், பொங்கல் திருநாளான அன்றைய தினம் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, சனிக்கிழமை அன்று அஞ்சல்துறை ஊழியர்கள் பணியைப் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும் துரைப்பாண்டியன் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close