[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

இணையம் மூலம் இணைந்த இளைஞர்கள்... ஜல்லிக்கட்டிற்காக மெரினாவில் பேரணி..!

youth-rally-in-chennai-marina-supporting-jallikattu

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் கூடி பேரணி நடத்தினர். எந்த அமைப்பும் சாராமல் பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் இணைந்த இளைஞர்கள், தமிழர்களின் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் உறுதியாகவுள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்து தோல்வில் முடிந்த நிலையில், மெரினா‌ கடற்கரையில் கூடிய கூட்டம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக 5 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் ஒன்றுக்கூடி பேரணி நடத்தினர்.

கலங்கரை விளக்கத்திலிருந்து, உழைப்பாளர் சிலை வரை நடைபெற்ற இந்த பேரணியில், தாரை, தப்பட்டை முழங்க ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் குரல் எழுப்பினர். தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பேணி காக்கும் வகையில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பதே பேரணியில் கலந்துக்கொண்ட இளைஞர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது.

பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்கள் எந்த ஒரு அமைப்பையும் சாராதவர்கள். பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் இணைந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்காக பேரணி நடத்தியதற்கு, அனைவர் மத்தியிலும் பரவலாக பாராட்டு கிடைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close