[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியலில் பாஜக-விற்கு வாய்ப்பு... வெங்கய்யா நாயுடு

chance-for-bjp-in-tamilnadu-venkaiah-naidu

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியலில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு வாய்ப்பிருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளேடு ஒன்றுக்கு வெங்கய்யா நாயுடு அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் ஆளுமை,‌ தனித்துவம், மக்கள் செல்வாக்கு ஆகியவற்றால் தமிழக அரசியலில் மற்றவர்களுக்கு இடம் இல்லாத நிலை இருந்ததாக தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா ஆதரவு மனநிலையில் இருந்தவர்கள் கூட ஜெயலலிதாவின் செல்வாக்கால் பாரதிய ஜனதாவுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்காத நிலை இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிமுக - திமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே, அதிமுக தேசிய சிந்தனை கொண்ட கட்சி என்பதால், பாரதிய ஜனதாவை விரும்பியவர்களும் திமுகவை விட அதிமுக பரவாயில்லை என்று நினைத்து வந்ததாகத் தெரிவித்தார். ஆனால், தற்போது அதுபோன்ற நிலை இல்லை என்பதால், தமிழக அரசியலில் பாரதிய ஜனதாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தமிழக முதல்வரை மாற்ற அதிமுகவினர் கோருவது குறித்து கேட்டபோது, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தார். இருப்பினும் மறைந்த ஜெயலலிதாவால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், இப்போது அதிமுகவினரின் தேர்வு வேறாக இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close