[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

கைவிட்ட வடகிழக்கு பருவமழை... வறண்டு கிடக்கும் அணைகள்

tamilnadu-dams-waterlevel

வடகிழக்கு பருவமழையை பெரிதும் நம்பியிருந்த நிலையில், எதிர்ப்பார்த்த அளவு மழையில்லாததால் 15 முக்கிய அணைகளில் கடந்தாண்டை வி‌ட இந்தாண்டு நீர்மட்டம் முழுவதும் குறைந்து விட்டது.

டெல்டா மாவட்ட வி‌சாயிகள் பெரிதும் நம்பியுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்தாண்டு 92 புள்ளி 65 அடியாக இருந்தது. ஆனால், இந்தாண்டு 37 புள்ளி 10 அடியாக மட்டுமே உள்ளது.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 45 புள்ளி 81 அடியாகவும், அமராவதி அணையின் நீர்மட்டம் 39 புள்ளி 08 அடியாகவும் நீர்மட்டம் குறைந்துவிட்டது.

வைகை அணையின் நீர்மட்டம் 25 புள்ளி 33 அடியாக உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 27 புள்ளி 25 அடிக்கு‌ம் மட்டுமே தற்போது தண்ணீர் உள்ளது. தென்மாவட்டங்களில் எதிர்ப்பார்த்த அளவு மழை பெய்யாததால் மணிமுத்தாறு அணையில் 36 புள்ளி 59 அடியும், பேச்சிப்பாறையில் 8 புள்ளி 10 அடியாகவும் நீர் இருப்பு உள்ளது.

பெருஞ்சாணி அணையில் 33 புள்ளி 35 அடியும் சாத்தனூர் அணையில் 91 புள்ளி 40 அடி நீரும் உள்ளது.

சோலையாறு அணையின் நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. 160 அடி கொண்ட அணையில் தற்போது வெறும் 4 புள்ளி 26‌அடிக்கு மட்டுமே தண்ணீருள்ளது.

பரம்பிக்குளம் அணையில் 16 புள்ளி 56 அடியும், ஆழியாறு அணையில் 63 புள்ளி 05 அடி தண்ணீரும் மட்டுமே உள்ளது. இதனால், விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் போதுமான தண்ணீர் இருக்குமா என்ற ஐயம் தற்போது எழுந்துள்ளது.

Advertisement:
Related Tags : Dam water level metturrdam tamilnadu
Advertisement:
Advertisement:
[X] Close