[X] Close
JUST IN

உள்ளாட்சி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிப்பு

extension-of-the-term-of-office-of-local-authorities

தமிழகத்தில் உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 24ந்தேதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவுபெற்றது. இதற்கிடையே 2 கட்டங்களாக நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனை டிசம்பர் 31ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

இதையடுத்து உள்ளாட்சி பணிகளை தொய்வின்றி நிறைவேற்ற தனி அதிகாரிகள் அவசர சட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், பல்வேறு காரணங்களால் டிசம்பர் 31ம் தேதிக்குள்ளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படவில்லை. இதையடுத்து, ஏற்கனவே நியமிக்கப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகளின் பதவிக்காலமானது வரும் ஜூன் மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Local systems tamilnadu
Advertisement:
Advertisement:
[X] Close