[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்
  • BREAKING-NEWS ஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்

தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

leaders-newyear-wishes

ஆங்கில புத்தாண்டு பிறப்பை‌ முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உழைப்பையும், சொந்தங்களையும் ஒருங்கிணைக்கும் வகையிலான இந்தியாவை உருவாக்க உறுதியேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அயாராது உழைத்து, வளமும் வலிமையும் மிக்க தமிழ்நாட்டை உருவாக்கிட உறுதியேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச்செய‌லாளராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தா‌ண்டு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்திட புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். திமுக பொருளாளர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மாநிலமும், நாடும் வளர்ச்சி பெற்று நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன் நடைபோட மக்களில் ஒருவராக முன்னிற்கப் போவதாக கூறியுள்ளார்.

இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ஆகியோர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close