[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

விமர்சிப்பவர்களும் பின்தொடரும் புனிதமான பொது வாழ்வை மேற்கொள்வோம்: சசிகலா

second-woman-leader-sasikala-speech

அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா முதன் முறையாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் தனது உரையில், விமர்சிப்பவர்களும் நம்மைப் பின்பற்றும் புனிதமான பொது வாழ்வை மேற்கொள்வோம் எனக் கூறினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தனது உலகம் என்று வாழ்ந்ததாகவும் சசிகலா தனது உரையில் குறிப்பிட்டார்.

கனியும், காயும், இலையும் வெளியே தெரியும் எனவும் இவற்றைத் தாங்கிப் பிடிக்கும் வேர் வெளியே தெரியாது எனவும், அந்த வேரைப் போன்றவர்கள் அதிமுகவின் தொண்டர்கள் என்றும் சசிகலா குறிப்பிட்டார்.

ஆணாதிக்கம் மிகுந்த அரசியலில் இந்தியா முழுவதும் தேடினாலும் இந்திரா ஒருவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற நிலையில், ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் பெண்ணினத்திற்கு நம்பிக்கையை அளித்தது என்று அவர் கூறினார்.

அதிமுகவுக்கு ஊக்க சக்தியே தாய்மார்கள்தான் என்று கூறிய அவர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ஒரு பெண்ணாக அதிமுகவின் பொதுச் செயலாளர் கடமையை ஆற்ற தான் முன் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

தனக்கு கோடான கோடி சகோதர சகோதரிகள் பக்க துணையாக நிற்பார்கள் என்ற நம்பிக்கையில் அந்தப் பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் சசிகலா கூறினார்.

போர்க்குணம் மிக்க ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் ஜெயலலிதா அதிமுகவை எந்த ராணுவக் கட்டுப்பாடோடு நடத்தினாரோ அதே ராணுவக் கட்டுப்பாட்டோடு, அவர் காட்டிய வழியில் இம்மி கூட விலகாமல் அதிமுகவைக் கொண்டு செல்வோம் என்றும் அவர் கூறினார்.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சாதி சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தலைவர்கள் என்றும் அதே வழியில் நடப்போம் என்றும் சசிகலா கூறினார்.

ஜெயலலிதாவின் ஆன்மா அருகே இருந்து, ஒன்றரைக் கோடி தொண்டர்களை உன்னிடம் ஒப்படைத்திருக்கிறேன் என்று தன்னிடம் சொன்னதாகவே உணர்வதாகவும் சசிகலா கூறினார்.

தன்னைப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப தனது வாழ்நாளின் எஞ்சிய காலத்தை அற்பணித்து உழைப்பேன் என்று கூறிய சசிகலா கண்கலங்கினார்.

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என முழக்கமிட்ட ஜெயலலிதாவின் வழியில் பணியை மேற்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close