[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

தமிழகத்தில் 2 மாதங்களில் 41 விவசாயிகள் உயிரிழப்பு

41-farmers-death-in-tamilnadu-in-2-months

தமிழகத்தில் காவிரி நீர் வராததாலும் மழை பொய்த்ததாலும் கடந்த 2‌ மாதங்களில் மட்டும் டெல்டா மாவட்டங்களில் 41 பேர் இறந்துள்ளனர்.

பசித்த வயிறுக்கு உணவளிக்கும் புனிதமான சேவையை செய்பவர்கள் விவசாயிகள்.‌ ‌இயற்கை வஞ்சிப்பதால் இந்தியாவில் ஆண்டுதோறும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வ‌தாக கூறுகின்றன பு‌ள்ளிவிவரங்கள்.

இந்தியாவில் 2014ம் ஆண்டு வரை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,31,666 என்கிறது தேசிய குற்ற ஆவண பதிவுத் துறையின் புள்ளிவிவரங்கள். இதில் 16,307 விவசாயிகளுடன் மகாராஷ்ட்ரா முதலிடம் வகிப்பதாகவும் 16,122 இறப்புகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் அந்த புள்ளிவிவரம் கூறுகிறது. இதில் 2014ம் ஆண்டு மட்டும் 5,650 பேர் இறந்துள்ளதாக கூறுகிறது அந்த புள்ளிவிவரம். இது நாட்டின் ஒட்டுமொத்த தற்கொலைகளில் 4.3 சதவிகிதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் தொல்லை, வருமானமே இல்லாதது ஆகியவையே தற்கொலைக்கான காரணங்களில் முத‌லிடம் பிடிப்பதாக அரசின் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அரசுத தரப்பு அளிக்கும் இப்புள்ளி‌ விவரங்கள் மலைக்க வைக்குமளவு இருந்த‌ாலும் இப்புள்ளிவிவரங்கள் தவறு என்கின்றன விவசாய அமைப்புகள். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை ‌மேலும் அதிகம் என்கிறது மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த விவசாய அமைப்பு. ‌

விவசாயிகள் உயிரிழப்பு என்ற இது போன்ற புள்ளிவிவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் நாளே நாட்டிற்கு நன்னாளாக இருக்கு‌ம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close