[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

சசிகலாவுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை

cm-o-panneerselvam-meet-sasikala

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கே.சசிகலாவை போயஸ் கார்டனில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து நாளை பொதுச் செயலாளராக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சசிகலா பதவியேற்க உள்ளார். பதவியேற்ற பின் அவர் தொண்டர்கள் மத்தியில் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாலை மெரினா‌ கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் வி.கே.சசிகலா, முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும், எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் போயஸ் கார்டனில் சசிகலாவுடன் முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Admk chennai opaneerselvam sasikala
Advertisement:
Advertisement:
[X] Close