[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

வறட்சியால் தொடரும் மரணம்... ஒரே நாளில் 5 விவசாயிகள் உயிரிழப்பு

farmers-dead-in-tamilnadu

தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடிய சோகத்தில் தமிழகத்தில் 5 விவசாயிகள்‌ இன்று ஒரே நாளில் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகேயுள்ள கம்பத்துபட்டியைச் சேர்ந்த பவுன்ராஜ் என்ற விவசாயி விஷம் அருந்தி இன்று காலை உயிரிழந்தார். கடன் வாங்கி சாகுபடி செய்த நிலையில், பயிர்கள் வாடியதால் பவுன்ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருவாரூர் வடுககுடியைச் சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் பயிர்கள் வாடிய வருத்தத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரே நாளில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். பக்ரிசாமி, கண்ணன் ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்தனர். மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த பெரியகருப்பன் என்ற விவசாயி பயிர் வாடிய கவலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close