[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

'சுவரில்லா கல்வியை சாத்தியமாக்கும் வானகம்'...! நம்மாழ்வாரின் நினைவு தினம் இன்று

nammalvar-memorial-day

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின், இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இயற்கை வேளாண்மை முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட நம்மாழ்வாரின் முயற்சியை, அவரது ஆதரவாளர்களும் தற்போது தொடர்ந்து கொண்டு தான் வருகின்றனர். இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்மாழ்வாரின் எண்ணமும் நிறைவேறி வருகிறது.

நம்மாழ்வார் உருவாக்கிய வானகம் பகுதியில் தற்போதும் கூட நடைபெறும் பயிற்சி முகாமில், இயற்கை வேளாண்மை, தமிழர்களின் பண்பாடு சார்ந்த கலைகள் போன்றவை பயிற்று விக்கப்படுகின்றன. சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் இயற்கை வேளாண்மை தொடர்பான கருத்தை ஏற்கச் செய்தால்தான், சமூக மாற்றத்திற்கு வித்திட முடியும் என்ற நம்மாழ்வாரின் சிந்தனையை இவ்வாறாகத் தான் செயலாக்கிக் கொண்டிருக்கிறது வானகம்.

சுவரில்லா கல்வியை உருவாக்க வேண்டும் என்ற நம்மாழ்வாரின் கொள்கைக்கும் வானகம் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இங்கு கற்றுத் தரப்படும் இயற்கை வாழ்வியல் முறை மற்றும் பாரம்பரிய கலைகளை இங்கு வருபவர்கள் விருப்பத்துடன் கற்றுக் கொள்கின்றனர். நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் எத்தகைய அறிவாற்றலை அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கப் பாடுபட்டாரோ, அதனை இன்றளவும் செய்து வருகிறது வானகம்.

இயற்கை வேளாண்மை தொடர்பான சமூக மாற்றத்தை இளைஞர்கள் மூலமாகவே ஏற்படுத்த முடியும் என்பதில் நம்மாழ்வார் உறுதியாக இருந்தார். இயற்கை வேளாண்மை மீதான ஈடுபாடும், அக்கறையும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளதற்கு, வாழ்நாள் முழுவதையும் விதையாக மாற்றி நம்மாழ்வார் தந்த ஆக்கமும், ஊக்கமும்தான் காரணம் என்பதை உறுதியாக நம்பலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close